புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தடை ரத்து : உயர்நீதிமன்றம்

தமிழகம்

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 25) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு, தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட சுவை யூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து உத்தரவை மீறியதாக சில நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பின் விவரம் பின்வருமாறு, “உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை.

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சட்டங்களும் புகையிலைப் பொருட்களுக்கு முழுமையான தடையை விதிக்கவில்லை. அந்த சட்டங்கள் தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை.

உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

எனவே, தனது அதிகாரத்தை மீறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

புதிய லுக்கில் அஜித்: வெளிநாடுகளில் பைக் சுற்றுலா!

இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு கை கொடுத்த கமல்

+1
1
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *