அன்னிய மரக்கன்றுகளை விற்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடைவிதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வந்தபோது, வனப்பகுதிகளில் அப்புறப்படுத்தும் அன்னிய மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம் எடுத்துக் கொள்வதாகவும் இதுதொடர்பாக 2 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

மேலும் இதுவரை தமிழக வனப்பகுதிகளில் 506 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அன்னிய மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்தமுறையும் இதேபோன்று அறிக்கை தான் அளிக்கப்பட்டது என்றும் வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக 2 வாரங்களில் முடிவு எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.

தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்கும் நர்சரிகளுக்கு தடைவிதிக்கவும், இதுதொடர்பாக அரசாணை வெளியிடவேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Ban on sale of foreign saplings

ஏற்கனவே யூகலிப்டஸ் என்று சொல்லக்கூடிய தைல மரத்தை நடக்கூடாது என்று இதே வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆங்கிலேயர்களால் 19-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தைல மரம், மருத்துவம் மற்றும் காகிதத்தின் பயன்பாட்டுக்காகப் பெருமளவில் வளர்க்கப்பட்டு வந்தாலும் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதாக கூறப்படுகிறது.

இதேபோன்று நீலகிரி போன்ற இடங்களில் மண்சரிவுக்கும் இதுபோன்ற அன்னிய மரங்களே காரணம் என்று கூறப்படுகிறது.

நம் மண்ணின் தன்மைக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்த மரங்கள் சின்ன மழைக்கே வேரோடு சாய்ந்து விழுகின்றன.

அத்துடன் மண்வளமும் கெட்டுப்போவதால் இதுபோன்ற அன்னிய மரங்களை அகற்றவேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கலை.ரா

ஊட்டி தாவரவியல் பூங்கா: 55 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *