சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு நாளை (ஜூன் 28) கருப்பு உடை அணிந்து வரவேண்டாம் என்ற பதிவாளரின் சுற்றறிக்கை வாபஸ் இன்று பெறப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தொடர்ச்சியாக பட்டமளிப்பு போன்ற விழாக்களில் சனாதனம் குறித்து பேசிவரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவதற்கு சில அரசியல் கட்சிகளும் மற்றும் மாணவ அமைப்புகளும் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர், போலீசார் அறிவுறுத்தலின்படி, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்றும், கைப்பேசி எடுத்துவரக்கூடாது என்றும் என்று சுற்றறிக்கை அனுப்பினார்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி, பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றொரின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கூறிய அறிவிப்பு திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக எம்.பி ஞானதிரவியம் முன்ஜாமின் கோரி மனு!
செந்தில் பாலாஜியை இனி ED கஸ்டடி எடுக்க முடியாது: முகுல் ரோத்தகி