அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார் எழுந்தன. இந்த வழக்கை விசாரிக்க அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். கடந்த 10ஆம் தேதி, அம்பாசமுத்திர வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட விசாரணையை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுடன் சென்று அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் கொடுக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு எண் 01/2023 ச/பி. 323, 324, 326 and 506 (i) இதச மற்றும் இதுதொடர்புடைய அனைத்து குற்ற வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்படுவதாக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
நான் தி.மு.க காரனா? கைய கட்டிட்டு பேசணுமா? சீறிய திருமா
டிஜிட்டல் திண்ணை: கலாமை புறக்கணித்த கவர்னர்… மோடிக்காக ரவி போடும் ராம்நாடு ஸ்கெட்ச்!