சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் உதய சங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
‘ஆதனின் பொம்மை’ நாவல் கீழடி அகழாய்வைப் பின்னணியாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய ’திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதைக்கு சிறந்த தமிழ் பதிப்பிற்கான யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள பாட்னா கூட்டத்தில் முடிவு?
புதிய தேர்வுக்குழு தலைவர்: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!