குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தாவில் விதம்விதமான உணவு வகைகள் செய்து பலர் அசத்துகிறார்கள். நீங்களும் உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்த இந்த பேக்கடு பாஸ்தா செய்யலாம். பீட்சாவும் பாஸ்தாவும் சேர்ந்த கலவை இது. Baked Pasta Recipe in Tamil
என்ன தேவை?
வேகவைத்த பாஸ்தா – 200 கிராம்
சிக்கன் – 200 கிராம்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
மைதா – ஒரு டீஸ்பூன்
பால் – 250 மில்லி
மொஸரெல்லா சீஸ் – 10 கிராம்
ஜாதிக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
கருப்பட்டி – சிறிதளவு
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
இத்தாலியன் மசாலா (Italian Spices) – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய குடமிளகாய், ஸ்வீட் கார்ன், காளான், கேரட் – அனைத்தும் மொத்தம் 50 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
ஓரிகானோ, ஆலிவ் – சிறிதளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சுத்தம் செய்யப்பட்டு நறுக்கிய சிக்கன் சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கி, பின்னர்அனைத்து உலர்ந்த மசாலா பொருள்களுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதன் மேல் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தூவிக்கொள்ளவும். இந்த கிரேவியுடன் காய்கறிகள் மற்றும் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து வதக்கி, தனியாக வைத்துக்கொள்ளவும்.
வொயிட் சாஸ் செய்ய… வெண்ணெய் மற்றும் மைதா சேர்த்து பின்னர் மூன்று தொகுதிகளாக பால் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கெட்டியான சாஸ் செய்து அத்துடன் சீஸ், கருப்பட்டி, ஜாதிக்காய்த்தூள், இத்தாலிய மசாலா, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். ஒரு பாத்திரம் அல்லது கண்ணாடி பவுலில் சிக்கன் – காய்கறிகள் – பாஸ்தா சேர்த்து அதன் மேல் ஓர் அடுக்கு வொயிட் சாஸ், இரண்டாம் அடுக்கு மொஸரெல்லா சீஸ் தூவவும். அதன்மேல் சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகானோ மற்றும் ஆலிவ் தூவி 200 டிகிரி செல்சியஸில் அவனில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். சூடாகப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அச்சத்தில் ஜே.எம்.எம் தலைவர்கள்: ஜார்க்கண்டில் நடக்கும் ஜனநாயக படுகொலை!
ஒத்த டயலாக்ல கில்லியவே சாச்சிட்டாரே ஐயா : அப்டேட் குமாரு
Baked Pasta Recipe in Tamil