தோசை, இட்லிக்கு சைடிஷாக காரச் சட்னி, தக்காளிச் சட்னி, தேங்காய்ச் சட்னி என்று செய்து அசத்தும் நீங்கள், இந்த பஜ்ஜி மிளகாய் சட்னியையும் செய்து பாருங்கள். இந்தச் சட்னியை தோசை, இட்லிக்கு சைடிஷாக மட்டுமல்லாமல், சாதத்தில் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம். பிரெட் டோஸ்ட்டிலும் தடவி சாப்பிடலாம்.
என்ன தேவை
பஜ்ஜி மிளகாய் – 4 (காம்பை எடுத்துவிட்டு வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்)
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தோல் உரித்த பூண்டு – 4 பல்
இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் நீக்கவும்)
தக்காளி – ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்)
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க…
கடுகு – ஒரு டீஸ்பூன்
உடைத்த உளுந்து – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
எப்படி செய்வது
வாணலியில் எண்ணெய்விட்டு, சூடானதும் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை (உப்பு நீங்கலாக) ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கி எடுத்து ஆறவிடவும்.
மிக்ஸியில் வதக்கிய கலவையைப் போட்டு உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மையாக அரைக்கவும். இறுதியாக தாளிக்கும் பொருள்களைத் தாளித்து இதில் சேர்த்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெஜ் ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?