இந்த வீக் எண்டில் பஜ்ஜி மிளகாயில் பஜ்ஜி மட்டுமல்லாமல் சுவையான குருமா செய்தும் அசத்தலாம். மாறுபட்ட சுவையுடன் வேற லெவல் டேஸ்ட்டுக்கு அழைத்துச் செல்லும் இந்த பஜ்ஜி மிளகாய் குருமா.
என்ன தேவை?
பஜ்ஜி மிளகாய் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பெங்களூரு தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கொரகொரப்பாக அரைக்க…
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 2 பற்கள்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை இலைகள் – 10
விழுதாக அரைக்க…
துருவிய தேங்காய் – 5 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 5 அல்லது 6
கசகசா (வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்தது) – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரைக்க வேண்டியதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். பஜ்ஜி மிளகாய்களைக் கழுவி 5 முதல் 6 வட்ட துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இதில் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். இத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். இதில் பஜ்ஜி மிளகாய்த் துண்டுகளை முக்கால் கப் தண்ணீரோடு சேர்த்து, மூடி போட்டு வேக விடவும். கிரேவி பதத்துக்கு வந்ததும், கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
சுரைக்காய் – கடலைப்பருப்பு தால்