பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புதிய தலைவர்!

தமிழகம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் உறுப்பினர்களுடன் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இதன் தலைவராக பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதிபதி எம்.தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதங்களை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களது பதவி விலகலை ஏற்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசனை அரசு நியமித்துள்ளது.

மேலும் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், கருத்தையா பாண்டியன், ஜெயராமன், சுடலைக்கண்ணன், மேக்ராஜ் ஆகியோரும்

மருத்துவர் மதியழகன், திருப்பூர் மாவட்டம் முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி முதல்வர் எஸ் பி சரவணன் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கலை.ரா

மொபைல் ஆலோசனை மையம் : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.