முதுமலை பந்திப்பூரில் புலி தாக்கியதால் படுகாயமடைந்த யானைக்குட்டி இன்று (ஏப்ரல் 20) உயிரிழந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலி காப்பகம் ஆசியாவின் மிக முக்கியமான புலிகள் காப்பகம் ஆகும். முதுமலையில் இருந்து பந்திப்பூர் செல்லும் சாலையில் இன்று (ஏப்ரல் 20) புலி ஒன்று யானை குட்டியை வேட்டையாடியது.
அப்போது தாய் யானை அந்த குட்டி யானையை மீட்க கடுமையாக போராடியது. இதனைத் தொடர்ந்து, புலி அங்கிருந்து சென்றது, தொடர்ந்து பலத்த காயமடைந்த யானைக்குட்டி அந்த சாலையிலேயே மயங்கி சரிந்தது.
குட்டி யானைக்கு பாதுகாப்பாக தாய் யானையும் அங்கு இருந்ததால், அந்த சாலையில் வெகு நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதனைத் தொடர்ந்து குட்டி யானை வனத்துறையினரால் மீட்கப்பட்டு, அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குட்டி யானை உயிரிழந்துள்ளது.
புலியிடம் சிக்கிய குட்டி யானையை மீட்க தாய் யானை கடைசி வரை பாசப் போராட்டம் நடத்திய நிலையிலும், குட்டி அதன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தது வனத்துறையினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமேதி போன்று வயநாட்டிலும் ராகுல் வெளியேற்றப்படுவார் : மோடி
’இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவில் தவறில்லை’ : உயர்நீதிமன்றம்