ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வழக்கத்தைவிட விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
நவராத்திரி கொண்டாட்டம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 9ஆம் நாளான இன்று ஆயுத பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆயுத பூஜை வழிபாட்டின் போது பொரி, கடலை, பழங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கோயம்பேடு மார்கெட் நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆயுத பூஜை சிறப்பு சந்தைக்கு வருகை தந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இதனிடையே பூக்கள், பழங்கள், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.110-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் ரூ.55, தக்காளி ரூ,15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ், கேரட், பீட்ரூட், பச்சைமிளகாய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கத்தை விட கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது.
ஒரு படி பொரி ரூ.25, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.50, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பாஜகவில் இருந்து திடீர் விலகல்… நடிகை கவுதமி குமுறல்!
திருப்பதி ரயில் நிலைய கட்டடம் இடிப்பு!