சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் இருந்து மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் உடலை வைரமுத்து மற்றும் எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் சுமந்து செல்ல அன்னாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான அவ்வை நடராசன்(85) வயது மூப்பின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.
பேராசிரியர், செய்தி வாசிப்பாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலர், பல்கலை துணைவேந்தர் என பல்வேறு பதவிகளை அவ்வை நடராசன் வகித்தார்.
இந்நிலையில் அவ்வை நடராசன் நேற்று உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளுக்கு பின் அங்கிருந்து மைலாப்பூர் மயானத்திற்கு அவ்வை நடராசன் உடல் இறுதி ஊர்வலமாக தற்போது எடுத்துச் செல்லப்படுகிறது.
அவரது உடலை கவிஞர் வைரமுத்து ஒரு பக்கமும், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மறுபக்கமும் இருந்து தோளில் சுமந்து சென்றனர்.
அவர்களுடன் தமிழக அமைச்சர்களும், நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒற்றுமை யாத்திரையில் களமிறங்கும் பிரியங்கா காந்தி
பல்கலைக் கழகங்கள் மீதான நம்பகத் தன்மை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!