மிகவும் மென்மையான, சுவையான, மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட சிற்றுண்டி வகை டோனட். இது மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் மெதுவாக பிரபலமாகி கொண்டு வருகிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் இதை அரிசியின் முழுமையான சத்துகள் உள்ளடக்கியதாக உள்ள அவலிலும் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
தட்டை அவல் – கால் கிலோ
வெங்காயம் – பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – அரை கைப்பிடி அளவு
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
ஓரிகேனோ – ஒரு டீஸ்பூன்
பீட்சா சாஸ் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கோட்டிங் செய்ய…
கார்ன்ஃப்ளார் – 6 டீஸ்பூன்
பிரெட் தூள் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அவலைத் தண்ணீரில் அலசி 5 நிமிடங்கள் மூடிவைக்கவும். நன்றாக ஊறிய அவலில் தேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவும். இந்த மாவை வடை போல சற்று தடிமனாக தட்டி, நடுவில் சிறிய ஓட்டை போட்டு, டோனட்ஸ் போல் வடிவம் செய்யவும். கார்ன்ஃப்ளாரில் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும். இந்த டோனட்ஸ்களை கார்ன் ஃப்ளார் கரைசலில் முக்கியெடுத்து, பிரெட் தூளில் புரட்டவும். எல்லாவற்றையும் இதுபோல் செய்து வைத்த வுடன் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதைச் சூடாக தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பிரெட் சீஸ் பைட்ஸ்!
கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் வடை