ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்ட்ரல் – அரக்கோணம் இடையே இன்று (பிப்ரவரி 17) இரவு முதல் நாளை (பிப்ரவரி 18) அதிகாலை வரை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் மற்றும் மூர்மார்க்கெட்டில் இருந்து 10.20, 11.30, 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரயில், திருவள்ளூரில் இருந்து இரவு 10.10-க்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரயில், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45-க்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50, 4 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரவு மற்றும் அதிகாலை நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இரவு பணி முடித்து வீடு திரும்புவோர் மற்றும் அதிகாலை வேலைக்கு செல்வோர் அவதியடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!
ரூ.1,264.54 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்