ias officers Corporation Commissioners transferred

கோவை, நெல்லை, மதுரை, ஆவடி மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்!

தமிழகம்

ஆவடி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (அக்டோபர் 17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் உயர் கல்வித்துறை துணைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், சென்னை மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மதுபாலன் மதுரை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக இருந்த சிவகுரு பிரபாகரன் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் கத்தா ரவி தேஜா சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

2040க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியா

இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை : எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *