அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் இன்று (செப்டம்பர் 4) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் காளிக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நேற்று காலை அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க முயற்சித்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள் கும்பலாக சேர்ந்து அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். உடனடியாக டிஎஸ்பியை அங்கிருந்த சக போலீசார் மீட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.
இது குறிந்து தகவல் அறிந்த விருதுநகர் எஸ்பி கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று டிஎஸ்பி மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே டிஎஸ்பியை தாக்கியதாக பாலமுருகன், காளிமுத்து, ஜெயராம்குமார், சஞ்சய்குமார், பாலாஜி, பொன்முருகன், சூர்யா ஆகிய 7 பேரை நேற்று இரவு அருப்புக்கோட்டை நகர போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Paralympics 2024: மீண்டும் சாதித்த மாரியப்பன் தங்கவேலு… இந்தியா புதிய வரலாறு!
“ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடினு விஜய் கலக்கியிருக்கார்” : அர்ச்சனா கல்பாத்தி