போலீசாரிடம் அட்ராசிட்டி : போதை ஜோடிக்கு ஜாமீன் மறுப்பு!

Published On:

| By Kavi

மெரினாவில் போலீசாரை ஆபாசமாக திட்டிய ஜோடிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இரவு சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் அருகே சாலையின் குறுக்கே காரை நிறுத்தி விட்டு ஜோடி இருவர் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.

அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் காரை எடுக்கும்படி கூறினர். இதி்ல் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து  வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனலட்சுமியும், சந்திரமோகனும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனி தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று (நவம்பர் 4) விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில், சந்திரமோகன், தனலட்சுமி இருவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில், இவர்கள் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. அன்று பேசியதற்காக மன்னிப்பும் கோரியுள்ளனர் என்று வாதிடப்பட்டது.

இந்நிலையில் காவல்துறை வாதத்தை ஏற்று, இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்தார் நீதிபதி.

இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பியூட்டி டிப்ஸ்: முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க… ஈஸி வழிகள் இதோ!

ஹெல்த் டிப்ஸ்: கண்களை பாதுகாக்க… சின்ன சின்ன பயிற்சிகள் போதும்!

முக்கிய நிர்வாகிகள் மாற்றம்… எச்சரித்த விஜய்

சீமான் அந்நியனாவும் மாறுவார்… அம்பியாவும் மாறுவார்… : பிரேமலதா விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel