உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்திருக்க பல வழிகளில் முயற்சி செய்கிறோம். அதற்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த அத்திப்பழ கீர். அனைவருக்கும் ஏற்ற இந்த கீர் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலை சரி செய்யும். கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
என்ன தேவை?
உலர் அத்திப்பழம் – 4
பால் – 200 மில்லி
சாரைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
உலர் அத்திப்பழத்தை சிறிதளவு தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த கலவையைப் பாத்திரத்தில் போட்டு, பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பனங்கற்கண்டு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பனங்கற்கண்டு கரைந்ததும் இறுதியாக சுக்குதூள், சாரைப்பருப்பு சேர்த்து இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் பொடிமாஸ்
சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைத்த பிறகு உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் ஆயுள் முழுக்க அவசியமா?