அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பத்திருந்தார். ஆனால் அவர் கேட்ட தகவலை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து RTI சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமை சட்டம் 8வது பிரிவின் கீழ் சில தனிப்பட்ட விவரங்களை அளிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசுப்பணி சார்ந்த தகவல்களை வழங்கலாம் என்றும், அரசுப்பணி ஊழியரின் விவரங்களை அறிந்துகொள்வது அடிப்படை உரிமை என்றும் வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசு ஊழியரின் பணியை பாதிக்கச் செய்யும் விவரங்கள் பாதுக்காக்கப்பட்டவை என்ற போது, அரசு ஊழியரின் சொத்துகள் மற்றும் கடன்கள் வெளிப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அதே போன்று சொத்துகள் மற்றும் கடன்கள் உள்ளிட்டவை தனிப்பட்ட விவரங்கள் அல்ல. மனுதாரர் கேட்ட விவரங்களை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் ரத்து செய்தார்.
மேலும் அடுத்த 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதியாம்… பாஜக அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!
தத்துவம் இல்லா தலைவர்கள்… விடுதலை 2 திரைப்படம் குறித்து திருமா பேச்சு!