Asset hoarding case - Vijayabaskar appeared in person

ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு தர முடியாது : விஜயபாஸ்கர் வழக்கில் வாதம்!

தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (ஏப்ரல் 25) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். கடந்த அதிமுக ஆட்சியில் 2016 – 2021 வரை வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 56 இடங்களில் சோதனை நடந்தது.

இதில் ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் சான்றுகள், 19 ஹார்டு டிஸ்க்குகள் என பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து விஜயபாஸ்கர், வருமானத்தை விட அதிகமாக 53 சதவீதம், அதாவது ரூ.35 கோடியே 79 லட்சம் சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் 2022 மே 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புதுக்கோட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதோடு 10 ஆயிரம் பக்க சொத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அந்த நீதிமன்றம் மூலம் 2022 ஆகஸ்ட் மாதத்தில் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழக்கின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தர மறுப்பதாக அமலாக்கத்துறை ஆன்லைனில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இன்று (ஏப்ரல் 25) புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணையில், சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடைபெறுவதால் ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு முழுமையாக தர முடியாது என லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாதம் செய்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜுன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

4 கோடி ரூபாய் விவகாரம்… போலீசில் ஆஜராகும் நயினார்

டி20 உலகக்கோப்பை தூதர் இவரா? கொண்டாடும் ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *