பயத்தம் பருப்பில் தயாரிக்கப்படுகிற பாரம்பரிய இனிப்பு அசோகா. திருவையாற்றில் மட்டுமே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் நெய் அசோகாவை நீங்களும் செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பயத்தம் பருப்பு – கால் கிலோ
பால் – அரை லிட்டர்
தண்ணீர் – ஒரு லிட்டர்
சர்க்கரை – ஒரு கிலோ
நெய் – அரை கிலோ
ஏலக்காய் – 10 கிராம்
முந்திரி – 50 கிராம்
பால்கோவா – 100 கிராம்
அல்வா கலர் பவுடர் – 10 கிராம்
எண்ணெய் – 100 மில்லி
கோதுமை மாவு- 50 கிராம்
மைதா -50 கிராம்
எப்படிச் செய்வது?
பயத்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக அலசி, அதனுடன் பால், தண்ணீர் சேர்த்து வேக வைத்து தனியாக வைக்கவும். ஒரு கடாயில் 100 மில்லி எண்ணெய் ஊற்றி சூடான பிறகு… நெய், 50 கிராம் கோதுமை மாவு, 50 கிராம் மைதா மாவு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
இதில், தயார் செய்து வைத்துள்ள பயத்தம் பருப்புக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிண்டி கெட்டியானவுடன்… சீனி, எண்ணெய், நெய், பால்கோவா, முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள், அல்வா கலர் ஆகியவற்றைச் சேர்த்து கிண்டவும். கையில் ஒட்டாத பதம் வந்தவுடன் இறக்கி வைத்தால், சூடான சுவையான ஸ்பெஷல் நெய் அசோகா ரெடி.
கிச்சன் கீர்த்தனா : தூத்துக்குடி மக்ரூன்