ஆன்லைன் சூதாட்டம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரட் அஷ்வின் கோபமாக பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் தடை சட்ட மசோதா பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், நேற்று (ஏப்ரல் 10) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார். தொடர்ந்து இன்று (ஏப்ரல் 11) ஆன்லைன் தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின், “கிரிக்கெட் விளையாடுவதற்கு ஊர்களில் இருந்து மட்டும் தான் ஆட்கள் வருகின்றார்கள். சிட்டியில் இருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு யாரும் வருவதில்லை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அஷ்வின், “நான் ஆன்லைன் ரம்மி விளையாடுவதில்லை. நாம் செய்யாத ஒரு காரியத்தைக் குறித்து பதிலளிக்க அவசியமும் இல்லை விருப்பமும் இல்லை.
உங்களுக்கு ஹெட்லைன்ஸ் வேணுமா உண்மை வேணுமா? ஆன்லைன் சூதாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா?
மொபைல் போன் கண்டுபிடித்தது யார் என்று வடிவேலு மாதிரி கேள்வி கேட்கிறேன். மொபைல் போன் எல்லாம் எடுத்து வைத்தால் எல்லாரும் மைதானத்திற்கு வந்துவிடுவார்கள். எடுத்து வைத்து விடலாமா? மூலகாரணம் என்னவோ அதைப் பாருங்கள். மொபைல் போன் வந்ததில் இருந்து தான் பசங்க மைதானம் பக்கம் வருவதே இல்லை.
ஒரு காலத்தில் லாட்டரி சட்டத்திற்கு புறம்பானது என்று தடை விதித்து விட்டார்கள். ஆன்லைன் சூதாட்டத்தையும் தடை செய்யுங்கள். திறமை சார்ந்த விளையாட்டுகளை எப்படி பந்தயம் கட்டுவது என்று சொல்வீர்கள்” என்று பேசினார்.
மோனிஷா
பொது இடங்களில் மாஸ்க் : பேரவையில் அமைச்சர் விளக்கம்!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கடந்து வந்த பாதை!