சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆன்மீக சொற்பொழிவுகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் இன்று (செப்டம்பர் 6) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் சில தினங்களுக்கு முன்பு பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சைதாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த சொற்பொழிவு நடந்துகொண்டிருக்கும் போது, அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சங்கர், “ எப்படி பள்ளியில் ஆன்மீகம் பேசுகிறீர்கள்?” என்று மகாவிஷ்ணுவை தட்டி கேட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, மகாவிஷ்ணுவை கண்டித்ததுடன், ஆசிரியர் சங்கருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சென்னை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்வில் ஆசிரியர் சங்கரை பாராட்டி பேசியபின், இன்று செய்தியாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்தார்.
அதில் “தவறுக்கு யார் காரணமாக இருந்தாலும் சரி, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 முதல் 4 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், அசோக் நகர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசியை திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைபள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் துறை ரீதியான விசாரணையும் அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் AC தலைமையில் மஹாவிஷ்ணு நடவடிக்கை மீதான விசாரணையும் தொடங்கி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும்! – ராமதாஸ்
மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு : தட்டி கேட்ட ஆசிரியரை நேரில் பாராட்டிய அன்பில் மகேஷ்!
ஆசிரியரை அவமானப்படுத்திய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன் : அன்பில் மகேஷ்