அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியானது சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செந்தில் குமார் நாடார் கல்லூரியில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றி வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அதன்படி வெள்ளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற மாணவரும் பயின்று வந்தார். இன்று (நவம்பர் 14) காலை வழக்கம் போல் கல்லூரிக்குச் செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது பாலவனத்தம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படிகட்டில் இருந்து தவறி விழுந்ததில் மாணவர் மாதேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படியில் பயணம் நொடியில் மரணம் என்று பேருந்துகளில் விழிப்புணர்வுக்காக ஒட்டப்பட்டிருக்கும் வாசகத்துக்கு ஏற்றார் போல் மாணவர் மாதேஸ்வரனின் மரணம் ஏற்பட்டுள்ளது.
பிரியா
“வடிகால் வசதி சீரமைக்கப்பட்டதா?”: கடலூரில் முதல்வர் ஆய்வு!
புதுச்சேரியிலிருந்து சீர்காழி புறப்பட்டார் முதல்வர்!