சென்னை ஃபெடரல் வங்கியில் நேற்று (ஆகஸ்ட் 13) கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து தரும் காவலர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் நகை அடகு அலுவலகத்தில் நேற்று பிற்பகல் கொள்ளையர்கள் 32 கிலோ தங்க நகையை கொள்ளையடித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒன்றின் பதிவு எண் போலீசாருக்கு கிடைத்துள்ளது. டிஎன் 10 ஏபி 9460 என்ற அந்த வாகனத்தின் பதிவு எண்ணை அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள் போலீஸார்.
மேலும், கொள்ளையில் ஈடுபட்ட வங்கியின் மார்க்கெட்டிங் மேனேஜர் முருகனுடைய புகைப்படமும் வெளியிடப்பட்டு, சென்னையில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, டி.ஜி.பி. சைலேந்திர பாபு கொள்ளையர்களை பிடித்து தரும் காவலர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மோனிஷா
பல்கலைத் தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக தலைவருக்காக எழுதியவர் கைது!
கொள்ளையர்கள் கைது சொய்யாமல் காட்டிக் கொடுக்காமல் இருக்க 10 லஞ்சமும் கொடுக்க தயார். சும்மா வந்த பணம்தானே …..