சிறுவர்கள் மீதான தீண்டாமை : கைதானவர்கள் ஊருக்குள் வர தடை!

தமிழகம்

தென்காசியில் ஆதி திராவிடர் நலப் பள்ளி சிறுவர்கள் மீதான தீண்டாமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கிராமத்திற்குள் நுழைய நெல்லை மாவட்ட போலீசார் தடை விதித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வந்தது.

இதன் காரணமாக போடப்பட்ட ஊர் கட்டுப்பாட்டை தொடர்ந்து கோனார் சமூகத்தை சேர்ந்த ஊர் தலைவர் மகேஷ்வரன் என்பவர் தனது கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த ஆதி திராவிடர் நலப் பள்ளி சிறுவர்களுக்கு, பொருட்கள் தர மறுத்து, அவர்களை விரட்டினார்.

இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை கண்ட பொதுமக்கள் பலரும், பள்ளி சிறுவர்களிடம் சாதி ரீதியாக பாகுபாடு காட்டியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து மகேஷ்வரன் மற்றும் அவரது நண்பர் ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவர் மீதும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த ‘கரிவலம் வந்தநல்லூர்’ காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

Arrested people are prohibited from entering the city

மகேஷ்வரன் கடைக்கும் சீல் வைக்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் பாஞ்சாங்குளம் கிராமத்துக்குள் வர தடை விதித்து நெல்லை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்கள் புரிபவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கலவரம், மோதல் ஏற்படாமல் இருக்க சில காலம் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்படுவது உண்டு.

பாஞ்சாங்குளத்தில் நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் முக்கிய பிரிவின் கீழ் கைதானவர்கள் ஊருக்குள் நுழைய தடைவிதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் எத்தனை காலத்திற்கு இந்த தடை தொடரும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவில் தான் தெரியவரும்.

கிறிஸ்டோபர் ஜெமா

எடியூரப்பா ஊழல் வழக்கில் எடப்பாடியின் உறவினர்!

மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் எப்போது? அமைச்சர் வேலு தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *