ஃபார்முலா 4 கார் பந்தயத்தை ஒரு செஷன் மட்டும் இலவசமாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தபோட்டி ஒத்தி வைக்கப்பட்டு இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 24) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, “வரும் 31, 1ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் F4 கார் பந்தயம் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் காவல்துறை , தீயணைப்புத் துறை என அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த பந்தயத்தை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை ஒரு செஷன், பொதுமக்கள் இலவசமாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மதியத்துக்கு மேல் தகுதிச்சுற்று தொடங்கி இரவு வரை நடைபெறும். கார் பந்தயம் நடைபெறும் போது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
‘அழகிய லைலா’-வை தொடர்ந்து ‘வாட்டர் பாக்கெட்’… வைரலான அன்ஷா ஷாகீர்