பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தனியார்ப் பள்ளி தாளாளர் அருண் ராஜ் இன்று (ஆகஸ்ட் 9) கைது செய்யப்பட்டுள்ளார். arunraj
கடந்த ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் காவல்துறையினர் மொத்தம் 23 பேரைக் கைது செய்திருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்.arunraj
இதற்கிடையில் அயனாவரத்தில் வசித்து வரும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு, சதீஷ்குமார் என்பவரின் பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியிருக்கும் தனது நண்பனை விடுவிக்காவிட்டால் பொற்கொடியைக் குண்டு வீசி கொலை செய்துவிடுவேன் என்றும் ஆம்ஸ்ட்ராங்கின் 4 வயது மகளைக் கடத்திக் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார். இதனை அடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து படூரைச் சேர்ந்த சதீஷ்குமாரை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தனியார்ப் பள்ளியின் தாளாளர் அருண்ராஜை செம்பியம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளது. அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… ஒரேடியாக உயர்ந்த தங்கம் விலை!