சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேஷனை மத்திய அரசு நியமித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக ஆர்.சங்கரநாராயணன் இருந்து வந்தார். அந்தபதவிக்கு தற்போது ஏ.ஆர்.எல். சுந்தரேஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணனை தற்போது தென் மண்டல கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (Additional Solicitor General of india (southern zone) நியமித்துள்ளது மத்திய அரசு.
இந்த நியமன உத்தரவை டிசம்பர் 16ஆம் தேதி பிறப்பித்துள்ள நிலையில், இந்த தேதியில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர்கள் இப்பதவிகளை வகிப்பார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு!
மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: 40 இடங்களில் வழங்க ஏற்பாடு!