தேனி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட அரிசிக் கொம்பன் யானை இன்று (ஜூன் 6) காலை வனப்பகுதியில் விடப்பட்டது.
கடந்த மே 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக் கொம்பன் யானை ஒரு வார காலமாக அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் கம்பம் நகர பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு அரிசிக் கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.
அரிசிக் கொம்பன் யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நேற்று (ஜூன் 5) அதிகாலை 3.30 மணியளவில் 4 மயக்க ஊசிகள் செலுத்தி வனத்துறையினர் யானையை பிடித்தனர்.
தொடர்ந்து 3 கும்கி யானைகளின் உதவியோடு லாரியில் ஏற்றி வனத்துறையினர் திருநெல்வேலிக்கு கொண்டு சென்றனர். திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக வனப்பகுதிக்கு நேற்று மாலை 5.30 மணிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மயக்க ஊசி செலுத்தியதால் யானை சோர்வாக காணப்பட்டுள்ளது. மேலும் யானையின் உடல் மற்றும் துதிக்கையில் காயம் இருந்துள்ளது. இதனால் மாஞ்சோலை வனப்பகுதியில் இரவு முழுவதும் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை அரிசிக் கொம்பன் பாபநாசம் அருகே அப்பர் கோதையாறு முத்துக்குளி வனப்பகுதியில் விடப்பட்டது.
மோனிஷா
எடப்பாடிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
ஒடிசாவில் கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள்!