அரிசிக்கொம்பன் வழக்கு : நீதிபதிகள் உத்தரவு!

அரிசிக்கொம்பன் யானையை எங்கு விட வேண்டும் என்று வனத்துறைக்குத் தெரியும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கேரளாவிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இந்த யானை பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதோடு விளை நிலங்களையும் சேதப்படுத்தியது. யானை தாக்கி கம்பம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் பலியானார்.

இந்நிலையில் வருவாய்த் துறை, காவல் துறை, வனத் துறை என மூன்று துறையினரும் நீண்ட போராட்டத்துக்கு பின் நேற்று அரிசி கொம்பனைப் பிடித்தனர்.
அதனை நெல்லை மாவட்டம் களக்காடு அருகே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே கேரளாவைச் சேர்ந்த ரெபேகா ஜோசப் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில் அரிசிக்கொம்பனை கேரள வனப்பகுதியில் விட வேண்டும். யானையைக் கேரள வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 6) நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்காகத் தெரிகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், அரிசிக்கொம்பன் யானையைத் தமிழக அரசு மிகுந்த சிரமப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிடித்திருக்கிறது.

அதனை எங்கு விட வேண்டும் என்று வனத்துறைக்குத் தெரியும். யானையின் போக்கு வனத்துறைக்குத்தான் தெரியும் என்பதால், இங்கு விட வேண்டும், அங்கு விட வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது.

இந்த வழக்கை பொறுத்தவரையில் யானைகள் மாற்றம் மற்றும் வன விலங்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு அந்த சிறப்பு அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிரியா

ரூ.100 பெட்ரோலுக்கு ரூ.2,000 நோட்டா?’: ஆத்திரத்தில் பழிவாங்கிய பங்க் ஊழியர்

ஐ.ஏ.எஸ் மலர்விழியின் பெற்றோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts