கிச்சன் கீர்த்தனா: அரிசி அப்பம்
நிறைய பேர் வீடுகளில் விசேஷ தினங்களின்போது அப்பம் செய்வார்கள். ஒவ்வொரு வீடுகளில் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். மிக மிக எளிமையான முறையில் அரிசி மாவை வைத்து ஐந்தே நிமிடங்களில் நீங்களும் சுவையான அப்பம் செய்ய இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை
அரிசி – ஒரு கப்
வெல்லம் – 50 கிராம்
பூவன் அல்லது செவ்வாழை (பெரியது) – ஒன்று
ஏலக்காய் – 4
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
எப்படி செய்வது?
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும். இதில் வாழைப்பழம், பொடித்த வெல்லம், பொடித்த ஏலக்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இட்லி மாவு பதத்தில் இருக்கும் இந்த மாவை 8 முதல் 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். இந்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?