Arignar Anna Cycle Race

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி: கலந்துகொள்வது எப்படி?

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நாளை (அக்டோபர் 14) நடைபெற உள்ள 2023-24ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளில் பங்குபெற விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ‘அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி’ நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி நாளை காலை 6.00 மணியளவில் சென்னை தீவுடத்திடலில் தொடங்கி,

சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், நேப்பியர் பாலம், காயிதே-இ-மில்லத் பாலம் இடதுபுறம் அண்ணாசாலை வழியாகச் சென்று,

மீண்டும் தீவுத்திடலில் தொடங்கிய இடத்திலேயே முடிக்கப்படும். இப்போட்டிகள் கீழ்கண்ட மூன்று பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது.

13 வயதுக்கு உட்பட்டவர்கள்-மாணவர்கள் / மாணவியர்கள்
15 வயதுக்கு உட்பட்டவர்கள்-மாணவர்கள் / மாணவியர்கள்
17 வயதுக்கு உட்பட்டவர்கள்-மாணவர்கள் / மாணவியர்கள்

மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3,000, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ,250 பரிசும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்படும்.

மேற்கண்ட போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவியர்கள் தன் சொந்த சைக்கிள் மற்றும் தலைக்கவசத்துடன் கலந்துகொள்ள வேண்டும்.

போட்டியாளர்கள் அனைவரும் வயது சான்றிதழுடன் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் சென்னை-3, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவுகள் செய்து கொள்ளலாம்.

போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும்.

இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேலும், நாளை காலை 5.30 மணிக்கு சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முன் ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது 044-26644794, 7401703480 மற்றும் 7338980191 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ராஜ்

திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்!

மதுரை – சிங்கப்பூர்: தினசரி விமான சேவை எப்போது?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts