Are you going to native for Independence Day leave?... Then don't forget to read this!

சுதந்திர தின லீவுக்கு ஊருக்கு போறீங்களா?… அப்போ இத மறக்காம படிங்க!

தமிழகம்

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 1620 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இன்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14ஆம் தேதி (புதன்கிழமை) 470 பேருந்துகளும், 16ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) மற்றும் 17ஆம் தேதிகளில் (சனிக் கிழமை) 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14ஆம் தேதி 70 பேருந்துகளும், 16 மற்றும் 17ஆம் தேதிகளில் 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது .

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 14, 16 மற்றும் 17 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் 14ஆம் தேதியில் 20,410 பயணிகளும் 16ஆம் தேதி 3,743 பயணிகளும் 17ஆம் தேதி 4,196 பயணிகளும் மற்றும் 18ஆம் தேதி 17,347 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”கொஞ்சம் பொறுங்கப்பா”: விஜய் ரசிர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!

“யார் அதிக பணிகளை செய்தது” : கோவை ஆத்துபாலம் குறித்த வேலுமணியின் கருத்துக்கு எ.வ.வேலு பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *