கொசுத்தொல்லை அதிகமா இருக்கா? – இந்த எண்ணுக்கு புகார் கொடுங்க!

Published On:

| By Kalai

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்  கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் கொசுத் தொல்லை அதிகமாக இருந்தால் 1913 எண்ணில் புகார் அளிக்க மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீர் வழித்தடங்களில் கொசுக்கொல்லி நாசினி, குடியிருப்பு பகுதி மற்றும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு புகை பரப்புதல் என கொசு ஒழிப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் படி  சென்னையில் நேற்று 280 கி.மீ மழைநீர் வடிகால் மற்றும் 65.22 கி.மீ நீர் வழித்தடங்களில் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், 3671 தெருக்கள் மற்றும் 304 கி.மீ நீளம் மழைநீர் வடிகால்களில், கொசு ஒழிப்பு புகை பரப்பி, கொசு ஒழிப்பு பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.

நீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் 71 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் உள்ள தண்ணீர் வெளியேற்றி சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக நீர்நிலைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

மேலும், தங்கள் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கலை.ரா

காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடி!

உருட்டுக்கட்டையுடன் கல்லூரிக்குள் நுழைந்த வட இந்தியர்கள்: அலறிய மாணவிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share