ஆட்டோ கட்டணம் உயர்வு தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். are auto fares high
ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டண உயர்வு தொடர்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆட்டோவில் பயணம் செய்யும் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.50 கட்டணம் என ஆட்டோ ஓட்டுனர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்ததாக தகவல் வெளியானது.
இந்தசூழலில் இன்று (பிப்ரவரி 18) ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை தொடர்பாக, சென்னை கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அவர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,
“பல்வேறு தொழிற்சங்களின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கட்டண உயர்வு கொண்டு வரவேண்டும் . ஓலா ஊபர் நிறுவனங்கள் ஆட்டோ தொழிலாளர்களின் வருவாயில் இருந்து பெரும் பங்கை பெறுகிறார்கள். அதை கட்டுப்படுத்த வேண்டும்,
பைக் டாக்ஸிகளை வரைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே தனியார் செயலிகளை கட்டுப்படுத்துவதற்கு, அதை ஒருங்கிணைந்த சென்னை போக்குவரத்து நிறுவனம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
பைக் டாக்ஸியை வரைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடங்கும்” என்றார்.
மேலும் அவர், “ஓலா ஊபருக்கு இணையாக தமிழக அரசால் ஒரு ஆப் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதன் தேவையை உணர்ந்திருக்கிறோம்” என்றும் கூறினார். are auto fares high