கிச்சன் கீர்த்தனா: ஆற்காடு மக்கன் பேடா

தமிழகம்

ஊர் பெருமை சொல்லும் இனிப்பு வகைகளில் ஆற்காடு மக்கன் பேடாவுக்கு தனியிடம் உண்டு.  குலாப் ஜாமூன் போலவே இருக்கும் இதைப் பார்த்தாலே நாவில் நீர் ஊறும். இந்த ஆற்காடு மக்கன் பேடாவை, இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நீங்களும் உங்கள் வீட்டிலேயே செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

வனஸ்பதி – ஒரு டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா – கால் டீஸ்பூன்
மைதா மாவு – கால் கிலோ
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை இல்லாத கோவா – கால் கிலோ
சர்க்கரை – கால் கிலோ ( பாகு தயாரித்துக் கொள்ளவும் )
எண்ணெய் – தேவையான அளவு
பாதாம் பருப்பு, வெள்ளரி விதை, சாரப்பருப்பு – தலா 10 கிராம்

எப்படிச் செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து வனஸ்பதியை ஊற்றி உருக்கவும். இத்துடன் சமையல் சோடா, மைதா மாவு, கோவா, தயிர், சர்க்கரை இல்லாத கோவா கலந்து குலோப்ஜாமூன் மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறிது சிறிதாக உருட்டி, இதில் ஒரு சிறு குழி போன்று செய்து இதன் உள்ளே பாதாம் பருப்பு , வெள்ளரி விதை , சாரப்பருப்பு மூன்றையும் வைத்து மூடி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் ஊற வைத்து எடுத்துப் பரிமாறவும்.

செங்கோட்டை பார்டர் பரோட்டா

கிச்சன் கீர்த்தனா: காஜா

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.