அரபிக் கடலில் உருவானது ’தேஜ்’ புயல்… தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?

தமிழகம்

தென்மேற்கு அரபிக்‌ கடலில்‌ ‘தேஜ்‌’ புயல்‌ உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம்‌ இன்று(அக்டோபர் 21) அறிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ கடந்த 19ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத்‌ தாழ்வுப்‌ பகுதி, நேற்று காலை காற்றழுத்தத்‌ தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தொடர்ந்து புயலாக வலுபெற்றுள்ள நிலையில், இந்த புயலுக்கு இந்தியா வழங்கிய ‘தேஜ்‌’ என்ற பெயர்‌ சூட்டப்பட்டுள்ளது. தேஜ் என்றால் வேகம் என்று பொருள்.

தேஜ் புயல் மேலும்‌ வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில்‌ மிக தீவிர புயலாக வலுப்பெறும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு – வடமேற்கு திசையில்‌ நகர்ந்து செல்லும் தேஜ் புயல் வரும் 25ஆம் தேதி தெற்கு ஓமன்‌ (சலாலா) மற்றும்‌ அதனை ஒட்டிய ஏமன்‌ (அல் கைதா) கடலோரப்‌ பகுதிகளுக்கு இடையே கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் ஏற்பட்டு உள்ள இந்த புயலின் காரணமாக தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.

அதே நேரத்தில் இந்த புயல் ஓமனை நோக்கி நகர்வதால், கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட அரபி கடலோரம் அமைந்துள்ள மாநிலங்களில் லேசான பாதிப்பு இருக்கும் இருக்கலாம் என்றுஇந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

அண்ணாமலை வீட்டு முன் கொடிக்கம்பம்… ஜேசிபியை அடித்து நொறுக்கிய பாஜகவினர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0