நாகூர் தர்காவில் ஏ.ஆர்.ரகுமான்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467-ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கியது.
நேற்று (டிசம்பர் 23) இரவு சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு இன்று (டிசம்பர் 24) அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவை வந்தடைந்தது. அங்கு சந்தனக்குடம் இறக்கப்பட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தொழுகை செய்தார். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாகூர் தர்கா சந்தனகூடு விழாவிற்காக வந்துவிடுவார் ஏ.ஆர்.ரகுமான்.
அந்த வகையில் இந்த வருடமும் நாகூர் கந்தூரி விழாவிற்கு நேற்று இரவு நாகூர் வந்து தங்கி, இன்று அதிகாலை 3.30 மணியளவில் தர்காவுக்கு சென்று தொழுகை செய்தார். நாகூர் தர்காவுக்கு நேற்று ஆளுநர் ரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓர் அதிகாரிக்காக இத்தனை போராட்டமா? புதுச்சேரியில் என்ன நடக்கிறது?
நடிகர் போண்டா மணி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!