பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேரிவித்துள்ளார்.
இன்று (ஜனவரி 22) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “சென்னை மாநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மழைநீர் வடிகால்வாய்களை தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நாளிலிருந்து, சென்னையின் மழை வெள்ளநீர் பாதிப்புகளிலிருந்து இந்த மாநகரை மீட்பதற்கு அவர் எடுத்துக் கொண்டு வருகிற நடவடிக்கைகள் அனைவருமே அறிந்த ஒன்று.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் 209 கிலோமீட்டர் நீளத்திற்கு 699 கோடி ரூபாய் மதிப்பிலான மழை நீர் வடிகால்வாய்கள் கட்டுவதற்கு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதில் 161 கிலோமீட்டர் நீளத்திற்கான மழை நீர் வடிகால்வாய்கள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
அதனால் சென்னையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் பாதிப்பு என்பது எங்கேயும் இல்லாத நிலை ஏற்பட்டு மாநகர மக்களால் வெகுவாக பாராட்டுக்களைப் பெற்றது.
இப்போது 48 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்பணிகளில் ஒன்றான சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிட்டி லிங்க் சாலையில், 3047 மீட்டர் நீளத்திற்கான, கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டருக்கும் மேலான அந்த நீளத்திற்கான மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணிகளை முதலமைச்சர் ஏற்கனவே நேரடியாக வருகை தந்து ஆய்வு செய்தார்.
2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிவுற்று சைதாப்பேட்டை குறிப்பாக மடுவின்கரை, மசூதி காலனி, பிள்ளையார் கோவில் தெரு, வண்டிக்காரன் தெரு போன்ற பல்வேறு பகுதிகள் மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டது.
மேலும், மீதமிருக்கிற ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதனை முதலமைச்சர் இன்று காலை நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.
அதோடு, வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, சென்னை மாநகரில் பெருநகர சென்னை மாநகராட்சியால் சாலைகள் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபுபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணிகளை முதலமைச்சர் தொடர்ச்சியாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
ஒப்பந்தங்கள் எப்போது விடப்பட்டது, எப்போது அந்த பணிகள் தொடங்கப்படவிருக்கிறது என்பதை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்தோடூ தொடர்ந்து ஆலோசித்து, ஆலோசனைகளை வழங்கிக் கொண்டருக்கிறார்கள்.
இன்றைக்கு 157ஆவது வட்டம் ஆற்காடு சாலையில், ரூபாய் 27.5 இலட்சம் மதிப்பிலான 475 மீட்டர் நீளத்திற்கான சாலை அமைக்கும் பணி, அதாவத ஏழு மீட்டர் அகலத்திற்கும், 475 மீட்டர் நீளத்திற்குமான சாலை அமைக்கும் பணியினை முதலமைச்சர் நேரடியாக வந்து ஆய்வு செய்து, பெருநகர சென்னை மாநகராட் சியின் வணக்கத்துக்குரிய மேயர் மற்றும் ஆணையர் அவர்களிடத்தில் மீதமிருக்கிற சாலைப் பணிகளையும் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை கலந்து ஆலோசனை செய்தார்.
இதோடு மட்டுமல்லாது, இன்னொரு கூடுதலான சிறப்பு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும், அரசு மற்றும் பல்வேறு துறைகளின் சார்பிலும் சென்னை மாநகரம் மழை வெள்ள பாதிப்புகள் இல்லாத அளவுக்கான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நீர்வள ஆதாரத் துறை, பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி என்று பல துறைகள் ஒருங்கிணைந்து, சென்னை மாநகரில் வெள்ள பாதிப்புகளை முழுமையாக போக்கியது.
அந்த வகையில், கடுமையாக உழைத்த பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களை பாராட்டுகிற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 31ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒரு பாராட்டு விழாவை நடத்தி அலுவலர்களை சிறப்பிக்க இருக்கிறார்.
இதன் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களை வெள்ள பாதிப்புகளிலிருந்து சென்னை மீள்வதற்கு அரசுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அலுவலர்களையும் பாராட்டுகிற, கெளரவிக்கற, சிறப்பிக்கிற அந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்” என்று பேசினார்.
மோனிஷா
கோவை: பெண்களுக்கு மட்டும் வாரிசு சிறப்பு காட்சி!
அண்ணாமலையிடம் எடப்பாடி சொன்ன வெளிவராத தகவல்!