14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்!

தமிழகம்

தமிழகத்தில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதல்வர்கள் நியமிக்கப்படாமல் அந்த பதவி காலியாக இருந்தது.

மருத்துவக் கல்வி கட்டமைப்பில் முக்கியமான இந்த பணியிடங்களை நிரப்பாதது குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர்.

14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளதால், நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் 14 டீன்களை நியமித்து தமிழக அரசு இன்று (அக்டோபர் 3) உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவை சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு இன்று (அக்டோபர் 3) வெளியிட்டுள்ளார்.

அதில், , மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி யூராலஜி பேராசிரியர் சிவசங்கர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மேற்பார்வையாளர் எம்.பவானி கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

கோவை இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை மருத்துவ மேற்பார்வையாளர் / பேராசிரியர், டி.ரவிக்குமார், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ராமலட்சுமி கன்னியாகுமரி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குமாரவேல் திருச்சியில் உள்ள விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எல்.அருள் சுந்தரேஷ் குமார் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,

நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஆர்.அமுதா ராணிராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பி.லியோ டேவிட் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜே.தேவி மீனல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வராகவும்

மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி பேராசிரியர் கலைவாணி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எஸ்.முத்துசித்ரா தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வி.லோகநாயகி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜெயசிங் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரோகினிதேவி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

“அந்த இயக்குநர் என்னை அறைந்தார்”: நடிகை பத்மபிரியா

முன்ஜாமீன் நிபந்தனை : பொன்.மாணிக்கவேல் கோரிக்கை ஏற்க மறுப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *