உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அதன்படி கடந்த 2019ம் ஆண்டில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து காலியிடங்கள் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு அந்த எண்ணிக்கையை அரசு உயர்த்தியது.
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என அவர் கூறியிருந்தார்.
அதன்படி நவம்பர் 8 ஆம் தேதி புதிதாக 4 ஆயிரம் பேரை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான பழைய அறிவிப்பாணையை தமிழக அரசு இன்று(டிசம்பர் 2) ரத்து செய்துள்ளது.
கலை.ரா
மாநில மொழிகளுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர்!
அமைச்சர் சொன்ன 100% சுகப்பிரசவம் சாத்தியமா?: மருத்துவர்கள் சொல்வது என்ன?