தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இன்று (மே 24) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் தற்போது 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (24.05.2023) முதல் 07.06.2023 வரை பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 147 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் onlineitiadmission@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 9499055612 அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.