application starts today for B.Ed

பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட் படிப்புகளுக்கு இன்று (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பான பி.எட். கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்‌ கல்வி இயக்குநர் அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரியில் 900 இடங்களும் அரசு உதவிபெறும் 14 கல்லூரிகளில் 1,140 இடங்களும் என 2,040 இடங்களில் பி.எட் படிப்பில் முதலாமாண்டு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவு செய்யலாம்‌.

இன்று முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம்‌ பதிவு செய்ய விண்ணப்பக்‌ கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும்‌. எஸ்சி/ எஸ்டி விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணைய பேங்கிங், யுபிஐ மூலம்‌ இணையதள வாயிலாக செலுத்தலாம்‌.

இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai — 15” என்ற பெயரில்‌ செப்டம்பர் 1 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும்‌ அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌. மேலும் விபரங்களைப் பெறுவதற்கு 93634 62070, 93634 62007, 93634 62042, 93634 62024 ஆகிய தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்‌ போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல்‌ வேண்டும்‌. இது தொடர்பான கூடுதல்‌ விவரங்கள்‌ மற்றும்‌ எந்தெந்த கல்லூரிகளில்‌, என்னென்ன பாடப்பிரிவுகள்‌, சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள்‌ உள்ளிட்ட தகவல்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில்‌ தெரிந்து கொள்ளலாம் என்றும் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

வெளியூரிலிருந்த வரும் பஸ், ரயில் பயணிகளுக்கு உதவ… மெட்ரோவின் தகவல் பலகை!

ஜி-20 மாநாட்டைப் புறக்கணிக்கும் உலகத் தலைவர்கள்: மோடிக்கு பின்னடைவா?

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன தபால் நிலையங்கள்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *