சர்க்கரை நோயாளிகள் தினமும் மூன்று முறை உணவு என்ற முறையை மாற்றி, சிறிய அளவில் ஐந்து முறை உண்ணலாம். சாப்பிடும்போது மெதுவாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
ஐந்து வேளையும் திட உணவு என்றில்லாமல், ஒருவேளை ஸ்வீட்னர் சேர்ந்த இந்த ஆப்பிள் திரட்டுப்பால் செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தலாம்.
என்ன தேவை?
கொழுப்பு நீக்கிய பால் – 3 கப்
துருவிய ஆப்பிள் – ஒரு கப்
ஜாதிக்காய்தூள் – ஒரு சிட்டிகை
ஏலக்காய்தூள் – கால் டீஸ்பூன்
ஸ்வீட்னர் – 2 பாக்கெட்
எப்படிச் செய்வது?
ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் 10-லிருந்து 15 நிமிடங்கள் காய்ச்சவும். துருவிய ஆப்பிளை சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்தூளைச் சேர்த்து மேலும் 8 முதல் 10 நிமிடங்கள் கிளறவும். நன்றாக ஆறவிடவும். ஸ்வீட்னர் தூவி, நன்றாகக் கலக்கவும். நன்கு ஆறிய பிறகு பரிமாறவும்.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?