பூண்டி மாதா கோயிலுக்கு சென்றபோது கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் மூழ்கிய நிலையில் 5வது நபரின் உடல் இன்று (செப்டம்பர் 4) காலை கண்டெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி சிலுவைப்பட்டி கிராமத்தில் இருந்து ஒரு பேருந்தில் 15 குழந்தைகள் உட்பட 57 பேர் கடந்த 2ம் தேதி நாகப்பட்டிணத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர்.
அதனைதொடர்ந்து நேற்று காலை பூண்டி மாதா பேராலயத்துக்கு சென்று கொண்டிருந்தபோது கொள்ளிடம் செங்கரையூர் பாலம் அருகே பேருந்தை நிறுத்தி விட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு தனியாக சென்ற 9 பேர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆற்றில் குதித்து தாமஸ், ஆபிரகாம், செல்வம் ஆகிய மூன்று பேரை உயிருடன் மீட்டனர். மற்ற 6 பேரும் நீரில் மூழ்கி மாயமானார்கள்.

நேற்று 4 பேர் உடல்கள் மீட்பு!
இதுகுறித்து தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கி 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முழுவதும் தேடிய தீயணைப்பு படையினர், சார்லஸ் (38), பிரிதிவ்ராஜ் (36) தாவீத்(30) மற்றும் பிரவீன்ராஜ் (19) ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
மேலும் ஒரு உடல் மீட்பு!
மேலும் மாயமான இருவரின் உடலை மீட்கும் பணியில் இன்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை ஹெர்மஸ் (18) என்பவரின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை!
ஆற்றில் மூழ்கிய ஈசாக் என்பவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: கோயிலுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்!
பிரபுதேவா இயக்கத்தில் மஞ்சுவாரியார் : வைரலாகும் ‘கண்ணிலு கண்ணிலு’!