ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு சிறப்பு பதக்கம் அறிவிப்பு!

Published On:

| By Kavi

தென் மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு ரொக்க பரிசு இல்லாமல் ‘சிறப்பு பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினம் இன்று (ஜூன் 25) கடை பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் தென் மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் 5 போலீசாருக்கு தமிழ்நாடு அரசு பதக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர் 09.05.2022 அன்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் / காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி,

வெ.பத்ரி நாராயணன், காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்.

டோங்கரே பிரவின் உமேஷ், காவல் கண்காணிப்பாளர். தேனி மாவட்டம்

மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்.

சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்

இரா.குமார், முதல் நிலை காவலர்-1380. நாமக்கல் மாவட்டம் ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கின் சீரிய பணியை அங்கீகரித்து அவருக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், சிறப்பு பதக்கம்” தனி நேர்வாக வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக பாண்டியா பொறுப்பேற்க வேண்டும்” – ரவி சாஸ்திரி

தண்டட்டி: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel