விரைவில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு இந்த ஆண்டிற்குள் மூடப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து 500 கடைகள் எப்போது மூடப்படும் என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடுவது குறித்து இன்று (ஜூன் 5) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
“500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
விபத்து பகுதிக்கு செல்லாதது ஏன்? உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி!
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்: வசூல் விவரம்!