அண்ணாமலை தோற்றதால் மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகியிடம் வனத்துறையினர் இன்று (ஜூன் 8) விசாரணை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் போன்றவை அனைத்திலும் தோல்வி அடைந்தன.
இதில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 1,17 ,561 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.
கோவை தொகுதியில் அண்ணாமலை தோற்றதால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி முந்திரிதோப்பு பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெயசங்கர், “கோவையில் அண்ணாமலை தோற்றால் மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன்” என்று விசிக மற்றும் அதிமுக கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டி இருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஜெயசங்கர் நடுரோட்டில் மொட்டை அடித்து மீசையை மழித்துக் கொண்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அதில் பாஜக நிர்வாகி ஜெயசங்கர் தனது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியில் புலி நகம் போன்ற டாலர் அணிந்து இருந்தது கவனம் பெற்றது.
இந்த காட்சிகள் வைரல் ஆன நிலையில், வனத்துறையினருக்கு ஜெயசங்கர் கழுத்தில் அணிந்திருப்பது புலி நகமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் அவரிடம் விசாரண நடத்தினர்.
இந்த விசாரணையில், ஜெயசங்கர் அணிந்திருந்த சங்கிலி 10 வருடங்களுக்கு முன்பாக திருச்செந்தூர் கோவிலில் தெருவோர வியாபாரிகளிடம் வாங்கிய பொருள் என்பதும் அது புலி நகம் இல்லை என்பதும் தெரியவந்தது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐஎம்டிபி டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் சமந்தா… என்ன சொன்னார் தெரியுமா?
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஜேசிடி பிரபாகர்.. உருவானது ’அதிமுக ஒருங்கிணைப்புக் குழு’!