அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா?: டிஜிபி முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

அண்ணா பல்கலை வழக்கில் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று காவல் துறை தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை போலீசார் விசாரித்து வரும் நிலையில், பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த சம்பவத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் டிஜிபி இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் புக்யா சினேஹா தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.

இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி / பிரசுரித்து வருகின்றன.

குறிப்பாக கைதானவர், ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்” சிறப்புப் புலனாய்வுக் குழுவானது. பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை கைதானவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்”

“திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் குற்றம்சாட்டப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்” என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும்.

இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திட வேண்டும்.

இவ்வாறான தவறான தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்” என்று கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

பிரியா

“ED சோதனையில் எதுவும் கைப்பற்றவில்லை” – துரைமுருகன்

12 மாவட்டங்கள் ரூ.176 கோடி : தமிழகத்துக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel